வவுனியாவில் 10 வயதுச் சிறுவன் கழுத்தறுத்து படுகொலை!!(படங்கள்)

1132

வவுனியா நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான்.

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 5ம் ஆண்டில் கல்விபயிலும் சஞ்சீவன் என்ற 10 வயதுச் சிறுவனே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும். மேலும் வவுனியா மாவட்ட நீதவான் அங்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவ்விடத்தில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும் எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை..

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்..

-பாஸ்கரன் கதீசன்-

11 1020212212 13 14