வவுனியா தமிழ் மாமன்றதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்மாருதம்-2015 (படங்கள் ,வீடியோ )

644

வவுனியாவை சேர்ந்த  இளைய தலைமுறையினரால்  உருவாக்கபட்ட  வவுனியா தமிழ் மாமன்றம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை தமிழ் மாருதம் என்னும் நிகழ்வு பிரம்மாண்டமான முறையில்    வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்தமிழர் பாரம்பரியம் கலை கலாசாரம் விவசாயம் என்பவற்றை  பிரதிபலிக்கின்ற வகையில் கடும் உழைப்பின் மூலம்  வடிவமைக்கப்பட்ட அரங்கில்  இன்று (12.03.2015)இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வானது தாய் தமிழ் மொழியை மற்றும் கலாச்சாரத்தை அத்துடன் சமூகவிழிப்புணர்வு  இளைய தலைமுறையினரது  ஆற்றல்களை வெளிக்கொண்டு வருதல் போன்ற  நோக்கங்களோடு  இம்முறை நடைபெற்றது .காலை  மாலை என இரு அமர்வுகளாக நடத்தபட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வுக்கு இலங்கையின் முதற்தர  வானொலி சக்தி எப் .எம் பூரண ஊடக அனுசரணை வழங்கியிருந்தது .

தமிழ் மாருதம் நிகழ்வில் வவுனியா  முல்லைத்தீவு  மாவட்டங்களை சேர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள  சமூக ஆர்வளர்கள் கலைஞர்கள் மற்றும் பல்கலைகழகமாணவர்கள்  பாடசாலை   பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள்  ஊடகவியாளர்கள் என பல்வேறு தரப்புகளை சேர்ந்தவர்களும் பங்குபற்றியிருந்தனர் .

மேற்படி நிகழ்வில் காலை பொதுநூலக சரஸ்வதி சிலையடியில் இருந்து ஒரு ஊர்வலமாக கலாசார மண்டபத்தை நோக்கி கலந்துகொண்ட மங்கள வாத்தியம் இசைக்க நிகழவில் கலந்துகொண்டவர்கள் அழைத்து வரப்பட்டமை விசேட அம்சமாகும் .

அத்துடன் காலையில் தமிழ்வாழ்த்து  வரவேற்புரை மற்றும் வாழ்த்துரை என்பவற்றை தொடர்ந்து  சுவாரஸ்யமான  சுழலும் சொற்போர்  கொழும்பு இராமலானை இந்துகல்லூரி ஆசிரியர் கேசவன் நடுவராக பங்கேற்க  இளைய தலைமுறையை சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் மேற்படி சுழலும் சொற்போர்  நிகழ்வில் தங்கள் வாய்ஜாலங்களை வெளிப்படுத்தியிருந்தனர் .

தொடர்ந்துபாடசாலை மானவர்களுகிடையில் நடத்தபட்ட  வன்னியின் வாத சமர் -2014 இல்  வெற்றி பெற்ற முல்லைத்தீவு மற்று வவுனியா மாவட்டங்களை சேர்ந்த  முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற  மாணவர்களுக்கான  சான்றிதல்கள் பதக்கங்கள் வெற்றி கேடயங்கள் என்பன வழங்கபட்டது .

மேலும் அரங்கையே வியக்கவைத்த தற்காலத்தில் பெண்களுகெதிராக   இடம்பெறும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வை மையப்படுத்திய  ஆண்பால்  என்னும்  நாடகமும் முல்லைதீவு கலைஞர்களால்  நாட்டிய நாடகமும் இடம்பெற்று இன்றைய  காலை அமர்வு  நிறைவு பெற்றது .

வவுனியா நெற் செய்திகளுக்காக வித்தகன் 

20150412_092935 20150412_092942 20150412_093106 20150412_093814 20150412_094343 20150412_102439 20150412_105105 20150412_105116 20150412_105125 20150412_110230 20150412_110239 20150412_110358 20150412_110635 20150412_110736 20150412_110811 20150412_110910 20150412_113448 20150412_113511 20150412_113558 20150412_113616 20150412_113800 20150412_113849 20150412_113920 20150412_114058 20150412_114121 20150412_115518