வவுனியாவில் விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

772

விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு, வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று(16.04) 10 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளை கௌரவிக்கும் முகமாக நெல் மற்றும் அரிசி தானமாக வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை வவுனியா பிரதேச செயலக, வளாகத்தில் அமைந்துள்ள கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பம்பைமடு, கோவிற்குளம், ஓமந்தை கமநலகேந்தர நிலையங்கள் பங்களிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன், மாவட்டவிவசாய பணிப்பாளர் திருமதி எல்.பி.ஈஸ்வரன், நகரசபை செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்திகிசோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

11 12