தந்தையைக் கொன்ற மகன் ரயிலில் பாயந்து தற்கொலை!!

490

train

பொலன்னறுவை – கனன்கோல்ல பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ததாக கூறப்படும் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை இவர் வெலிகந்தை பகுதியில் வைத்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் கூரிய ஆயுதத்தால் தந்தையை தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் சந்தேகநபரைக் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.