இந்தியாவினால் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒன் அரைவல் விசாவினை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வழங்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகி்ருஸ்ணன் இந்தியத் தூதரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையர்கள் பெரும்பாலும் திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்கள் ஊடாகவே இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர் எனவும் கல்வி ராஜாங்க அமைச்சர் இந்தியத் தூதர் வை.கே.சிங்ஹாவிடம் தெரிவித்தார்.
ஆகவே இந்த இரண்டு விமான நிலையங்களிலும் இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் விசா வசதியினை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
புதுவருட தினத்தன்று இந்தியாவினால் இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் விசா வசதியினை புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின், கோவா ஆகிய விமான நிலையங்களில் இந்த நடைமுறை அமுல் படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






