மதுபோதையில் வாகனம் செலுத்திய 1347 சாரதிகள் இன்று வரை கைது!!

855

Traffic

புத்தாண்டு காலப் பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் நடவடிக்கையின் போது 1347 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 11ம் திகதி முதல் இன்று காலை 6.00 மணி வரையில் உள்ள காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளாவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.