தமிழ் பெண்ணை மணப்பதற்காக இந்து மதத்தை தழுவிய முஸ்லிம் இளைஞன்!!

946

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார். பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவரே இவ்வாறு மதம் மாறி மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி காளி கோயில் வீதியில் வசிக்கும் சுதாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு திராவிடர் பாரம்பரிய முறையாக காது குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.

இவர்கள் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகனின் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி மோகன் தெரிவிக்கையில், நமது சமூகத்திற்கு ஒரு கட்டுப்பாடு நியதி உள்ளது. அதன் பிரகாரம் அவர்களுக்கு எமது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

எமது சமூகத்திற்குள் முறையற்ற விதத்தில் யாரும் நடக்க முற்பட்டால் இதுதான் இனியும் நடக்கும் என்று தெரிவித்தார்.

1 2 3