தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் வவுனியா சமளங்குளம் அ.த.க. பாடாசாலைக்கு நிதியுதவி!!(படங்கள்)

563

வவுனியா சமளங்குளம் அ.த.க. பாடாசாலை யினைச் சேர்ந்த ஆரம்ப பிரிவு மாணவர்கள் சிறுவர் நிகழ்ச்சியின் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சீருடைக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரிடம் பாடசாலை அதிபர் திரு.சிவானந்தன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாட விதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (17.04) சீருடைக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோயில்குளம் இளைஞர் கழகம் பெயர் மாற்றப்பட்டு இன்று தமிழ் தேசிய இளைஞர் கழகமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன், பொருளாளர் த.நிகேதன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சுரேந்தர், மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது.

20 21 22 23