இத்தாலி வாகன விபத்தில் இலங்கையர் பலி!!

548

accident

இத்தாலி, க்ரேமோனா பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஓட்டிச்சென்ற கார், ட்ரக் வண்டியுடன் மோதியதினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 55வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது மேற்கொள்ளப்படுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.