வன்னியூர் செந்தூரனின் கவிக்கனவுகள் கவிதை இறுவட்டு நேற்று முன்தினம் (17.04) வெளியிடப்பட்டுள்ளது.
இறுவட்டினை வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் வெளியிட்டுவைக்க துணுக்காய் வலய கல்விப்பணிப்பாளர் மாலினி பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் பிரதியினை வடமாகாண கலை பண்பாட்டுப் பணிப்பாளர் வனஜா பெற்றுக்கொண்டார்.
வடமாகாணசபையின் புத்தாண்டுப் பெருவிழா நேற்று கற்சிலைமடு பாடசாலையில் பாடசாலையின் அதிபர் சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வைத்தே இவ் இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் முடிவில் இவ் இறுவட்டில் பங்காற்றிய ஒலிப்பதிவாளர் கலிஸ்ரஸ் உட்பட கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.









