மோசடியில் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு நேரடித் தொடர்பில்லை!!

1061

Mahendaran

மத்திய வங்கி ஒப்பந்த பத்திர மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதராங்கள் இல்லை என, இது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தனது மருமகனின் நிறுவனத்திற்கு இலாபமீட்டும் வகையில் மத்திய வங்கி கடன் தொடர்பில் ஒப்பந்த பத்திரம் கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூவர் அடங்கிய விசாரணை குழுவொன்றை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.