பட்டதாரி பயிலுநர்களை இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 3-1(அ) ஆம் தரத்திற்கு ஆட்சேர்க்க கல்வியமைச்சு வர்த்தமானி மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
அவர்கள் தேசிய பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், தகவல்தொழினுட்பம், ஆங்கிலமொழி ஆகிய பாடங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.
07.12.2011ஆம் திகதிய அமைச்சரவைத்தீர்மானத்திற்கமைவாக வரவு–செலவுத்திட்ட யோசனைகளை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை வகுத்தல் என்பதன்கீழ் பயிலுநர்களாக ஆட்சேர்க்கப்பட்டு தற்சமயம் பயிற்சி பெறுகின்ற அல்லது அந்நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றதன் பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியில் நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகளினுள் இலங்கை ஆசிரிய சேவையினுள் நுழையவிரும்பும் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 04.05.2015 ஆகும். போட்டிப்பரீட்சை மற்றும செயல்முறைப் பரீட்சை, நேர்முகத்தேர்வு போன்றவற்றினூடாக தெரிவுகள் இடம்பெறும். மேலதிக விபரங்களுக்கு 17.04.2015 அரச வர்த்தமானியைப் பார்க்கலாம்.






