நுவரெலியா – பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் , அக்கரமலை தோட்ட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பகுதியில் மறைந்திருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பூண்டுலோயோ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தாய் மற்றும் மகள் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் நேற்று பூண்டுலோயாவில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
தீவிர தேடுதலில் ஈடுபட்ட பூண்டுலோயா பொலிஸார் சந்தேகநபரை இன்று அதிகாலை 3 மணியளவில் தலவாக்கலையில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் குற்றச்செயலுக்காக பயன்படுத்திய கத்தி மற்றும் சம்பவம் இடம்பெற்றபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரட்டைக் கொலையின் சந்தேகநபரான மகன் இன்று நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.






