சில உறுப்பினர்களின் செயலால் பாராளுமன்றிற்கே வெட்கக்கேடு : கே.டி.மெண்டிஸ்!!(படங்கள்)

773

சில உறுப்பினர்கள் முழுமை பெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்றத்திற்குள் இரவொன்றை களித்து பாராளுமன்ற பாரம்பரியத்திற்கும், வரலாற்றிற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கே.டி.மெண்டிஸ் இன்று சிங்கள நாளிதழொன்றுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்குள் முழுமையான ஆடைகளுடனே பிரவேசிக்க வேண்டும் என சட்டமொன்று காணப்படுகின்ற நிலையில்,

எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் நடந்து கொண்ட முறையினால் வெட்கி தலைகுனிய வேண்டியேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகர் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமை ஆச்சரியம் தர கூடிய விடயம் என கே.டி.மெண்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

3 1 2 4 1 2 3 4 5 7 10 9 8 6