முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் : பஷில் ராஜ­பக்ஷ!!

343

Basil

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அரசாங்கத்தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசாரணைக்கு தான் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார் .

இதே­வேளை நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை வென்று பல வரு­டங்­க­ளாக அர­சியல் செய்து வரும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் ஒரு போதும் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­ட­து­மில்லை, கொள்ளை­யிட போவ­து­மில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பிற்­பாடு அமெ­ரிக்கா சென்ற முன்னாள் பொரு­ளா­தார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ நேற்று மீண்டும் இலங்கை வந்­த­டைந்தார். டுபாய் நாட்டிலி­ருந்து கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வந்து இறங்­கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரி­விக்கும் போதே பஷில் ராஜ­பக்ஷ இவ்வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

ராஜ­பக்ஷ குடும்­பத்­த­வர்கள் எப்­போதும் மக்­களின் நல­னுக்­காகவே போராடி வந்­துள்­ளனர். 1931 ஆம் ஆண்டு காலப்­ப­குதி முதல் எமது குடும்­பத்­தினர் அர­சியல் செய்து வரு­கின்­றனர். இத­னூ­டாக மக்களின் நம்­பிக்­கையை வென்­றுள்­ளனர். எனினும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக் ஷ குடும்­பத்­தினர் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­ட­தில்லை. அவ்­வாறு கொள்­ளை­யிடப்போவ­து­மில்லை.

எவ்­வா­றா­யினும் எனக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு என்னால் முடி­யு­மான அனைத்து ஆத­ர­வி­னையும் வழங்க தயா­ராக உள்ளேன். நான் எந்தவொரு குற்­றத்­தையும் செய்­ய­வில்லை. இதனை என்னால் உறு­திப்­ப­டுத்த முடியும். ஆகவே பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு முன்­னு­ரிமை அளிக்கும் வகை­யி­லேயே நான் நாடு திரும்­பினேன்.

இதே­வேளை நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் என்ற வகையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எனது சகோ­த­ர­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தோல்­விக்கு முழு­மை­யான பொறுப்பை நானே ஏற்­றுக்­கொள்­கிறேன். எனினும் தோல்விக்கு நானே பிர­தான கார­ண­மாக அமைந்­ததை போன்று அவரின் முன்னைய வெற்றிகளுக்கும் நானே பொறுப்பாவேன்.

ஆகவே அர­சியல் ரீதி­யாக பிழை­யான தீர்­மா­னங்கள் எடுத்­தி­ருப்­பினும் நான் ஒரு­போதும் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­ட­வில்லை என்பதனை என்னால் உறுதியாக கூறமுடியும்.
எவ்வாறாயினும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் எதிர்வரும் காலங்களில் செயற்படுவேன் என்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.