சச்சினின் சாதனையை முறியடிப்பார் மத்தியூஸ் : டி ஸொய்சா!!

448

Mathews

சச்சின் டெண்­டுல்­கரின் டெஸ்ட் சாத­னையை எஞ்­சலோ மத்­தியூஸ் முறி­ய­டிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் முகாமையாளர் டி ஸொய்சா கூறி­யுள்ளார்.

46 டெஸ்ட் போட்­டி­களில் இது­வரை விளை­யா­டி­யுள்ள மத்­தியூஸ் 3,193 ஓட்­டங்­களை 51.50 என்ற சரா­ச­ரியின் கீழ் எடுத்­துள்ளார். இதில் 4 சதங்கள், 20 அரை­ச­தங்கள் அடங்கும்.
156 ஒருநாள் போட்­டி­களில் 3,783 ஓட்­டங்­களை 1 சதம் மற்றும் 26 அரை­ச­தங்­க­ளுடன் எடுத்­துள்ளார். இது­கு­றித்து டி ஸொய்சா கூறி­ய­தா­வது,

“பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான தொடர் முதல் 2015 உலகக் கிண்ணப் போட்­டிகள் வரை, எஞ்­சலோ மத்தி­யூஸின் வளர்ச்சி பிர­மா­த­மா­னது. அவர் என்ன இடத்தை நிரப்ப வேண்­டுமோ அதனை நிரப்பியுள்ளார். மஹேல, சங்­கக்­கார ஆகியோர் அணியில் இல்­லாத போது அவர் தானே தலைமைத்­தாங்க வேண்டும், அப்­போது அவ­ரது திற­மையை நாம் உண்­மையில் பார்க்க முடியும்.” என்றார்.

எஞ்­சலோ மத்­தியூஸ் தற்­போது செல்லும் பாணியில் சென்றால் சச்சின் டெண்­டுல்­கரின் டெஸ்ட் சதங்கள் சாத­னையை முறி­ய­டிக்க முடியும். அவர் தற்­போது வைத்­தி­ருக்கும் சரா­ச­ரியை நீடித்து நிலைக்கச் செய்ய முடியும். இலங்கை கிரிக்­கெட்­டுக்கு இவர் இன்னும் நிறைய பங் களிப்புகளைச் செய்ய முடியும்” என்றார்.