வவுனியா கள்ளிக்குளத்தில் சிறுவர்களின் கிராமியச் சந்தை!!(படங்கள்)

1129

வவுனியா, கள்ளிக்குளம் கிராமத்தில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் சிறுவர்களுக்காக மாலைநேர கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இதன்படி இக்கிராமத்தில் இயங்கி வரும் சிறுவர் கழகத்தின் சிறுவர்களின் ஏற்பாட்டில் கிராமத்தில் தமது வீட்டுத் தோட்டங்களில் விளைந்த கத்தரிக்காய், மிளகாய், பயிற்றங்காய், கீரைக்கட்டுகள், பப்பாசிப்பழங்கள், வாழைப்பழங்கள், உட்பட பல கிராமிய விளை பொருள்களை சந்தைப்படுத்தும் நிகழ்வு கள்ளிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமது பொருள்களை விற்பனை செய்தமையை காணக்கூடியதாக இருந்தது.

1 2 3