வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு வீடுகளில் காணப்படும் கழிவுப்பொருட்களில் கூட்டெருவை தயாரிக்கும் வழிமுறைகளுக்காக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய திண்மக்கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு கூட்டெரு தயாரிக்கும் முறைகள் உட்பட அதன் பயன்பாடுகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதன்போது தேசிய திண்மக்கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தின் உதவி பணிப்பாளர் டி.பி. இந்திக, வவுனியா நகரசபையின் செயலளார் க. சத்தியசீலன் உட்பட நகரசபை உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







