இலங்கை 7000 இலட்சங்களை இழக்க நேரிடும் : திலங்க சுமதிபால எச்சரிக்கை!!

548

Thilanka Sumathipala

தேர்தல் நடத்­தப்­ப­டாமல் இலங்கைக் கிரிக்கெட் இடைக்­கால நிர்­வாக சபை நிறு­வப்பட் டுள்­ள­மை­யினால் சர்­வ­தேச கிரிக்கட் பேரவை அதி­ருப்­தி­ய­டையும். இதனால் ஐ.சி.சியினால் இலங்­கைக்கு வழங்­கப்­ப­ட­வி­ருந்த ரூபா 7000 இலட்சம் நிதி­யு­தவி கிடைக்­காமல் போகும் அபாயம் உள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் தலை­வ­ரு­மான திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்ளார்.

மேலும் எதிர்­வரும் சில மாதங்­களில் நடக்­க­வி­ருக்கும் சர்­தேச கிரிக்கெட் கவுன்­ஸிலின் வரு­டாந்த சம்­மே­ளனக் கூட்­டத்­திற்­கான அழைப்பை இலங்­கைக்கு விடுக்­காமல் இருப்­ப­தற்கும் சாத்­தியம் இருப்­ப­தா­கவும் திலங்க சும­தி­பால எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

நேற்று சுதந்­திரக்கட்சி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது கேட்­கப்­பட்ட கேள்வி ஒன்­றுக்குப் பதில் அளிக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் இடைக்­கால சபையில் ஐ.சி.சி. திருப்தி கொள்­ளாது. இது மிகப்­பெ­ரிய அபா­ய­மாகும். நிர்­வாக சபையை தெரிவு செய்ய முறை­யான தேர்தல் நடத்­தப்­பட வேண்­டி­யது அவ­சியம். அல்­லாத பட்­சத்தில் இலங்கை கிரிக் கெட் சிக்­க­லுக்­குள்­ளாகும் அல்லாத பட்சத்தில் இலங்கை கிரிக் கெட் சிக்கலுக்குள்ளாகும் அபாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.