கணவனை அலவாங்கால் அடித்துக் கொன்ற மனைவி!!

556

Police

சிகிரியா – கிம்பொஸ்ஸ பகுதியில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் உறங்கிக் கொண்டிருந்த வேளை மனைவி அலவாங்கினால் அவரை தாக்கியுள்ளார்.

இன்று (24.04) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிம்பொஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

43 வயதுடைய தனது கணவரை கொலை செய்த 33 வயது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.