ஊடகங்களை ஒடுக்கும் வகையில் 19 வது திருத்தச்சட்டம்!ராஜீவ விஜேசிங்க தெரிவிப்பு!

510

192-720x480

ஊடகங்களை ஒடுக்கும் வகையில் 19 வது திருத்தச்சட்டம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவன அதிகாரிகளை அடக்கி ஒடுக்கும் வகையிலான விடயங்கள் 19 வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட சட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விடயங்கள் 19 வது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.



முதலில் அரசாங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் மட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய வகையில் காணப்பட்ட சட்டத் திருத்தத்தில் மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதியில் உள்ளடக்கப்படாத புதிய திருத்தங்களில் தனியார் துறை ஊடகங்கள் மீது வழக்குத் தொடரக் கூடிய வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்தாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான புதிய சட்டத் திருத்தங்களினால் ஊடகங்களின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.