தேசியக்கொடியை மற்றியமைத்து சிலர் யாப்பை மீறியுள்ளனர் : ரணில் கவலை!!

735

Ranil

தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று காலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமையின் அடையாள சின்னமான தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பொது மக்கள் பிரதிநிதிகள் அண்மையில் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் யாப்பு மீறப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.