நேபாள நிலநடுக்கம் : பேஸ்புக்கின் சிறப்பு வசதி!!

1012

fb

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது பேஸ்புக்.

இது பற்றி பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ பேரழிவுகள் நடக்கும் போது மக்கள் தமது அன்புக்குரியவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

மேலும் இது போன்ற சமயங்களில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்க வேண்டியதும் அவசியம். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களின் பேஸ்புக் பக்கத்தில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்று கேட்கப்பட்டு, பின்னர் அவர்களின் பதில் அவருடைய அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைப் பெற https://www.facebook.com/safetycheck/nepalearthquake என்ற முகவரிக்குள் பிரவேசிக்கவும்.