தனது கணவரை நடிகை அல்போன்சா அபகரித்துவிட்டதாக இளம்பெண் பொலிசில் புகார்!!

968

alp

நடிகை அல்போன்சா மீது சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து, தன்னுடன் வைத்திருப்பதாகவும், அது குறித்துக் கேட்டால் தன்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார் என்றும் கூறி இருந்தார்.

தனது கணவர் நடிகை அல்போன்சாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு, அல்போன்சாவை தனது மனைவி என்று குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கணவரை அபகரித்து வைத்துள்ள அல்போன்சா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகார் மனுவுடன் அல்போன்சாவும் ஜெய்சங்கரும் ஒன்றாக இருப்பது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்கள் அடங்கிய இறுவட்டு ஒன்றையும் காவல்துறையினரிடம் அவர் கையளித்திருந்தார்.

இப் புகார் மனு குறித்து விசாரித்த காவற்துறையினர் இருவரையும் விசாரணைக்காக நேற்று அழைத்திருந்தனர். அங்கு ரகசிய இடத்தில் வைத்து புகார்அளித்த அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஜெய்சங்கரை அப் பெண் காதலித்து எவ்வாறு திருமணம் செய்தார். அவரது கணவருக்கு நடிகை அல்போன்சாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதில்அளித்த அப் பெண், ‘8 ஆண்டுகளாக ஜெய்சங்கரை காதலித்து வந்ததாகவும் கடந்த 2013ம் ஆண்டு மருதமலை முருகன் ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அல்போன்சாவும் நேரில் வந்து வாழ்த்தினார் என்றும் தெரிவித்திருந்தார்.

தனது கணவரும் அல்போன்சாவின் தம்பியும் நெருங்கிய நண்பர்கள். அந்த பழக்கத்தில் தான் அல்போன்சா வந்திருந்ததாக சுஜாதா காவற்துறையினரிடம் தெரிவித்தார்.

துபாயில் வேலை கிடைத்து அங்கு சென்ற என் கணவர் என்னை அழைத்துச்செல்ல மறுத்துவிட்டார். அதன்பிறகு தான் அல்போன்சாவுக்கும் என் கணவருக்கும் நெருக்கம் அதிகரித்ததை தெரிந்து கொண்டேன்.

திடீர்என்று ஒருநாள் அல்போன்சாவே எனக்கு அழைப்பை எடுத்து நான்தான் ஜெய்சங்கரை முதலில் திருமணம் செய்து கொண்டேன். எனவே நீ அவரை விட்டு ஓடிவிட வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார் என்றும் அப் பெண் தெரிவித்தார்.

விசாரணையின் போது தனக்கும் ஜெய்சங்கருக்கும் திருமணம் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்களை கொடுத்தார். அல்போன்சாவுடன் ஜெய்சங்கர் ஒன்றாக இருக்கும் பேஸ்புக் புகைப்படங்களையும் சுஜாதா வழங்கினார்.

மேலும் அல்போன்சா தன்னை மிரட்டிய தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்தார். இவை அனைத்தையும் காவற்துறையினர் பெற்றுக்கொண்டனர். அப் பெண்ணின் தந்தையிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அல்போன்சாவிடமும், ஜெய்சங்கரிடமும் விசாரணை நடத்த காவற்துறையினர் முடிவு செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் அல்போன்சா மீது வழக்குப் பதிவுசெய்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.