படப்பிடிப்பில் நடிகை ராய் லட்சுமிக்கு காயம்!!

607

Raai-Laxmi

தமிழில் மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் சௌகார்பேட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கும் மௌனகுரு படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

தற்போது சௌகார்பேட்டை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சண்டைக் காட்சியில் லட்சுமிராயின் கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காயத்தால் ராய் லட்சுமி தற்போது அவதிப்பட்டு வருகிறாராம். இதனால், படப்பிடிப்புக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ராய் லட்சுமி, ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம் என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கெனவே, ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா படத்திலும் ராய் லட்சுமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.