வவுனியா பூவரசங்குளத்தில் புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

980

வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.ரவி தலைமையில் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி 25.04.2015 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா, கிராம அலுவலர், பூவரசங்குளம் பொலிஸ் அதிகாரி திரு.ராஜகுரு, கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு.யோகராசா, மாதர் சங்கத்தலைவி திருமதி.பத்மா, கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு கழகங்களின் வீரர்களுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

11 12 13 14 15 16 17 18 19 20