நேபாளத்தில் இலங்கை வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு!!

706

Nepal

நேபாளத்தின் காத்மண்டுவை அண்மித்த பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற 7.8 ரிச்டர் அளவிலான பூகம்பத்தால் இலங்கையின் 14 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூகம்பம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் இலங்கை அதிகாரிகள் நேபாளத்தில் உள்ள இலங்கை தூதுவருடன் தொடர்புகொண்டு நிலைமைகளை அறிவித்ததாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தின் ஊடகப் பணிப்பாளர் ருக்மால் பெரேரா தெரிவித்தார்.

14 வயதுக்குட்பட்ட இலங்கை கனிஷ்ட பெண்கள் அணியினரும் அதிகாரிகளும் நேற்று இரவு அங்கிருந்து விமானம் மூலம் புறப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்ததாக அவர் கூறினார்.