சங்­கக்­கார, மஹேல இல்லாதது அணிக்கு பேரிழப்பு : மத்­தியூஸ்!!

441

Mathews

இலங்கை அணியில் சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன ஆகிய இரு­வரும் விட்­டுச்­சென்ற வெற்றிடத்தை நிரப்புது கடினம் என்று இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மத்­தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர்­க­ளாக விளங்­கிய குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன, இந்த ஆண்டு நடை­பெற்ற உல­கக்­கிண்ணத் தொட­ரோடு சர்­வ­தேச ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்­றனர்.

இந்­நி­லையில் இலங்கை அணியில் இவர்­களின் இழப்பை ஈடுசெய்ய நீண்ட காலம் எடுக்கும் என்று இலங்கை அணித்­த­லைவர் மத்­தியூஸ் கூறி­யுள்ளார்.

தற்­போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்­காக விளை­யாடி வரும் மத்­தியூஸ், இது தொடர்­பாக கூறு­கையில், சங்­கக்­கார மற்றும் ஜய­வர்­தன ஓய்வு பெற்­றதால் இலங்கை அணியில் மிகப்­பெ­ரிய வெற்­றிடம் உரு­வாகி விட்­டது.

அந்த வெற்­றி­டத்தை நிரப்ப சிறிது காலம் தேவைப்­படும். அணித்­த­லை­வ­ராக இந்த நிலை­மையை சமா­ளிப்­பது சற்று கடி­ன­மா­னது. இருப்­பினும் எங்­க­ளிடம் திற­மை­யான இளம் வீரர்கள் உள்­ளனர்.

அடுத்த உல­கக்­கிண்­ணத்­திற்கு இன்னும் 4 ஆண்டு கால அவ­காசம் உள்­ளது. அதற்குள் இலங்கை அணி நல்ல ஒரு நிலைமையை அடையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.