உலகின் முதல் செல்பி அருங்காட்சியகம்!!

325

கைபேசி கமராக்களில் தங்களை தாங்களே படம் பிடித்துக்கொள்வது (செல்பி) இன்று ஒரு கலையாகவே மாறிவிட்டது. குறிப்பாக செல்பி படம் எடுப்பதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் மிகுந்த மோகம் கொண்டு உள்ளனர். இதுபோல் செல்பி படம் எடுத்துக்கொள்பவர்களுக்காக தலைநகர் மணிலாவில் ஒரு அருங்காட்சியகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

செல்பியில் படம் எடுப்பவர்கள் தங்களுடைய புகைப்படங்களை இந்த அருங்காட்சியகத்தில் வைத்து அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கட்டிடங்களில் ஏறி நின்று செல்பி புகைப்படங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

இங்குள்ள முப்பரிமாண வகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை தொடலாம். அவற்றுடன் விளையாடலாம். இதுதான் உலகின் முதல் செல்பி அருங்காட்சியகம் என்று கூறப்படுகிறது.

S S1 S2 S4 S5