செயற்கை கடற்கரையுடன் உலகின் பெரிய கட்டிடம் சீனாவில் திறப்பு!!

414

china

கட்டிடங்களில் செயற்கை நீரூற்று இருப்பதை பார்த்திருக்க முடியும்; ஆனால், சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் செயற்கையாக கடற்கரையே அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையம் இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக இருந்தது. தற்போது துபாயை பின்னுக்கு தள்ளும் வகையில் சீனாவில் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நியூ செஞ்சரி குளோபல் மையம் என்ற இந்த கட்டிட வளாகத்தில் 1.9 கோடி சதுர அடி பரப்பளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

முழுவதும் எஃகு கம்பிகள், கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் கடைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளன. சூரிய அஸ்தமன வீடியோ காட்சியை காணும் வகையில் மிகப்பெரிய எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விட கட்டிடத்தின் நடுவே மிகப்பெரிய செயற்கை கடற்கரையும், கடற்கரை பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது.