நேபாள நிலநடுக்கத்தில் சாதனை படைக்கவிருந்த வீராங்கனை பரிதாபமாக பலி!!

523

Nepal

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை ரெனே நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லியை சேர்ந்த இந்திய மலையேற்ற வீராங்கனையான ரெனே(49) தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஏற்கனவே தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ரெனே, தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பனிப்பாறைகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று எவரெஸ்ட் பகுதியில் சிக்கியுள்ள 150க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.