வவுனியா பொது வைத்தியசாலையில் புதுவருட விளையாட்டு நிகழ்வு 26.04.2015 ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வடமாகாண கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி.ப.சத்தியலிங்கம் Dr.K.அகிலேந்திரன் (பணிப்பாளர், பொது வைத்தியசாலை,வவுனியா) மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,தாதியர்கள் ஏனைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேற்படி புதுவருட விளையாட்டு நிகழ்வில் சதுரங்கம் சாக்கோட்டம் கயிறிழுத்தல் மற்றும் கபடி மோட்டார் சைக்கிள் ஓட்டம் என்பன இடம்பெற்றதோடு வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு பரிசில்கள் வவனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.K.அகிலேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டன .