தங்கக் கட்டிகளை வழங்கும் ATM இயந்திரம்!!

584

ATM

ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பலஸ் ஹோட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பணமான திர்ஹம் தாள்கள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு 10 நிமிடமும் தங்கத்தின் சந்தை விலை நிலவரத்தை தெரிவிக்கும் இந்த இயந்திரத்தின் மேற்பகுதி முழுவதும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஒரு ஒன்லைன் வர்த்தக நிறுவனம், இந்த வணிகத்தை செய்து வருகின்றது. அங்கிருந்து தருவிக்கப்படும் தங்கத்தில் எமிரேட்ஸ் பலஸ் ஹோட்டலின் அடையாள முத்திரை பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஹோட்டலில் தங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களில் பலர் இந்த இயந்திரத்தில் தங்கம் வாங்கிச் செல்வதில் ஆர்வமாக உள்ளனர்.