வரலாற்று தொன்மை மிக்க சிகிரியா சுவரில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி உதயஸ்ரீ இன்று காலை விடுதலையாகி வீடுதிரும்பிக்கின்றார்.
சிகிரியா சுவற்றில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சின்னத்தம்பி உதயஸ்ரீ பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், அவரிற்கு இரண்டு வருடங்கள் சிறைதண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து அவரிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
எனினும், சின்னத்தம்பி உதயஸ்ரீ சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் அவரது விடுதலைக்கு தடையாக காணப்பட்டது.
உதயஸ்ரீ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நேற்று (புதன்கிழமை) நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல்நீதிமன்றத்தில் வைத்து வாபஸ் பெற்றுக்கொண்டன.
இதனைத் தொடர்ந்தே அவர் அநுதாரபுரம் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், தற்சமயம் அவர் வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக அவரது சட்டத்தரணி சத்தணாமூர்த்தி தெரிவித்தார்.










