சமிந்த வாஸ் பதவி விலகல் : அரசியல் தலையீடே காரணம்!!

695

Vaas

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் பதவி விலகியுள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

விளையாட்டில் அரசியல் தலையீடு இருப்பதால் பதவி விலக தீர்மானித்துள்ளதாக சமிந்த வாஸ் தெரிவித்தார்.

அதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் எதிர்காலத்தில் எவ்வித தொடர்பையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என தெரிவித்தார்.

சமிந்த வாஸ் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக 2013 பெப்ரவரி மாதம் நிமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.