மலாலா மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட 10 பேருக்கு ஆயுள் சிறை!!

584

Malala

பாகிஸ்­தா­னிய கல்வி செயற்­பாட்­டாளர் மலாலா யூஸப்­ஸாயி மீது நடத்­தப்­பட்ட தாக்குத­லுடன் தொடர்­பு­பட்ட 10 பேருக்கு ஆயுள் சிறைத்­தண்­டனை விதித்து அந்­நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்­துள்­ளது.

மலாலா 2012 ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்த போது, சுவாட் பள்ளத்தாக்கில் பாட­சாலை பஸ்ஸில் வைத்து அவ­ரது தலையில் துப்­பாக்­கியால் சுடப்­பட்­டது.
இந்த சம்­பவம் முழு உல­கை­யுமே அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யி­ருந்­தது.

தனது உயி­ருக்­குள்ள அபா­யத்தைப் பொருட்படுத்­தாது சிறு­வர்கள் உரி­மை­க­ளுக்­காக பிர­சா­ரத்தில் ஈடு­பட்­ட­மைக்­காக அவ­ருக்கு கடந்த வருடம் சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் ஆயுள் தண்­டனை விதிக்கப்பட்டவர்­களில் பாகிஸ்­தா­னிய தலிபான் தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த பிர­தான சந்­தே­க­நபர் உள்­ள­டங்­கு­கிறார். இந்தத் தாக்குதலுக்கு உள்ளூர் தலிபான் தலை­வ­ரான முல்லாஹ் பஸ்­ லுல்­லாவே உத்தரவிட்டிருந்ததாக பாகிஸ்­தா னிய அதிகாரிகள் நம்புகின்­றனர்.

மேற்­படி தாக்­கு­தலை­ய­டுத்து பிரித்­தா­னி­யா வில் சிகிச்சை பெற்ற மலாலா (தற்­போது 17 வயது) பர்மிங்­ஹாமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தலிபான்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாக அவர் தாய்நாடு திரும்பமுடியாத நிலையில் உள்ளார்.