கலாச்சாரம் மற்றும் முதியோரைப் போற்றும் எம் தேசத்தில் இப்படியும் சில மனிதர்கள்!!(அதிர்ச்சிக் காணொளி)

667

Capture

வடக்கின் கலாச்சாரத்தின் முக்கிய நகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சி தற்போது பல்வேறு கலாசார சீரழிவுகளின் பிடியில் சிக்குண்டு சீரழிந்து வருவதை கடந்த சில வருடங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

கோர யுத்தத்தின் மூலம் எமது சமூகக் கட்டமைப்பு முற்றாக சிதைவடைதுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த விதவைகள், பராமரிக்க யாருமற்ற முதியோர், அங்க அவயங்களை இழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் என மீண்டெழ முடியாத சோகத்திற்குள் எம் இனம் சுருண்டு கிடக்கின்றது.

இன் நிலையிலிருந்து எம் இனத்தினை மீட்டெடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரின் கடமையாகும். எம் உறவுகளுக்கு ஆதரவாக எம்மைத் தவிர வேறு யாரால் இருக்க முடியும்?

அண்மையில் பல்வேறு இணையத்தளங்களில் “கிளிநொச்சியில் பாட்டியின் குத்தாட்டம்” என்ற பெயரில் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பாக எல்லோராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மனநலம் குன்றிய வயோதிபப் பெண் ஒருவர் சிங்கள மொழிப் பாடல் ஒன்றுக்கு ஆட வைக்கப்பட்டுள்ளார். கருப்பு நிறக் கண்ணாடியும் அவருக்கு அணிவிக்கப்பட்டு பின்னணியில் இருந்து சிலரால் வேகமாக ஆடுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதனை பாடசாலை மாணவர்கள் பலர் வேடிக்கை பார்த்து சிரிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.

முதியோர் மற்றும் பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அதிலும் மனநலம் குன்றியோர் அரவணைக்கப்பட வேண்டியவர்கள். இப்படிப்பட்ட சிலரால் எமது அடுத்த தலைமுறைக்கு தவறான பாடம் கற்பிக்கப்படுகின்றது.

வயோதிபப் பெண் என்றும் பார்க்காமல் இவரை ஆடவைத்தவர்கள் தமது தாயையும் இப்படி ஆடவைப்பர்களா??