கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
21 வயதுக்குட்பட்டோருக்கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த துடிப்பான வீரர் கிரிகோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்டிகளிலே விளையாடியிருந்தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்.
இவர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிசர்வ் அணி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே வைத்தியர்கள் விரைந்து சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோமா நிலைக்கு சென்ற அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று வைத்தியர் கள் கூறியதையடுத்து, செயற்கை சுவாசத்தை நிறுத்த உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால்இ நேற்று மாலை அவர் உயிர் பிரிந்தது.






