இரண்டாவது குழந்தைக்குத் தாயான இங்கிலாந்து இளவரசி!!

1149

william-kate--z

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார். பிரசவத்துக்காக லண்டனில் உள்ள செயிண்ட் மேரி வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இன்று காலை அவர் பெண் குழந்தை ஒன்றை பிரசுவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வில்லியம் – கேத் தம்பதியினருக்கு ஜோஜ் என்ற அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.