யாழில் பொலிஸாரிடம் வசமாக மாட்டிய வாள்வெட்டுக் குழு!!

1575

valvedu

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு குழு நேற்றிரவு 8 மணியளவில் வீடுதேடிச் சென்று இளைஞர் ஒருவரை வாளால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்தார்.

இந்த வாள் வெட்டுச் இடம்பெற்று சிறிது நேரத்தில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மத்தையா குழுவெனக் கூறப்படும் குழுவொன்றைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் தெல்லிப்பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வாள்வெட்டில் காயமடைந்த எஸ். நிதர்ஷன் என்ற இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த தெல்லிப்பளைப் பொலிஸார், கைது செய்யப்பட்ட மூவரிடமும் இதுகுறித்து தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகக் கூறினர்.

மாத்தையா குழுவென்ற பெயரில் இந்தக் கும்பல் முன்னரும் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.