ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் இனந்தெரியாத நபரொருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று பெலியத்த நாகுழுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது 53 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான ரணசிங்க பியதாச என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் இதுவரையிலும் இனங்காணப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.






