வெசாக்கை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பரிசோதனை!!

711

Thansal

வெசாக்கை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தன்சல்களில் வழங்கப்படும் உணவுகளின் சுகாதாரத் தரம் பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தன்சல்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாடுபூராகவும் 6000க்கும் மேற்பட்ட தன்சல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை பரிசோதிக்க 1800 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1500 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையை முன்னெடுப்பார்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.