வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வவுனியாவில் உள்ள 450 வேலையற்ற பட்டதாரிகளில் 100 பேருக்கு நிரந்தர நியமனம் குறுகிய காலத்துள் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (03.05.2015 ஞாயிற்றுக்கிழமை )பிற்பகல் 2.00 மணியளவில் வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .
மேற்படி கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் திரு.ம.ஆனந்தராஜா அவர்களும் கொழும்பு பல்கலைகழக அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் கைத்தொழில் வாணிப அமைச்சின் அமைச்சர் கௌரவ ரிசாத் பதியுதீன் அவர்களின் ஆலோசகரும் இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவகத்தின் தலைவருமாகிய கலாநிதி அனிஸ் அவர்களும் கலந்து கொண்டு பட்டதர்ரிகள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினையாகிய வேலையின்மையை போக்கும் வண்ணம் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை அந்தஸ்து மிக்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார் .
மேலும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து முதற்கட்டமாக எதிர் வரும் வாரங்களில் அமைச்சர் அவர்கள் பட்டதாரிகளை சந்திக்கவுள்ளார். தொடர்ந்து பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பாகவும் கலந்துரையாடுவார் என அமைச்சரின் ஆலோசகர் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
நகர செய்தியாளர்.