வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகள் நினைவு தினம் 03.05.2015 சித்திரை பௌர்ணமி தினமான நேற்று காலை 8.30 மணிக்கு கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் (சிவன் கோவில்) முன்பாக அமைந்துள்ள இளங்கோ அடிகள் சிலை முன்றலில் சிலையினை பராமரிக்கும் சிவன் கோவில் அனுசரணையில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் நகரபிதாவும் ,வடமாகாண சபையின் உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் உபநகரபிதாவும், 29.03.1999 இல் சிலையை திறந்து வைத்தவருமான திரு சந்திரகுலசிங்கம் (மோகன்) முன்னாள் அதிபர்களான திரு வையாபுரிநாதன், திரு சிவஞானம், நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), உறுப்பினர் மாணிக்கம் ஜெகன், சிவன் கோவில் அறங்காவலர்சபை செயலாளர் திரு நவரத்தினராசா, வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன், அருளகசிறுவர் இல்ல சிறார்கள் மற்றும் கோவில்குளம் இந்துக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள், மாணவர்கள் மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய பின் தமிழ் மணி அகளங்கன் அவர்கள் இளங்கோ அடிகள் பற்றியும் அவரின் நூலான சிலப்பதிகாரம் பற்றியும் கண்ணகி அம்மன் வழிபாடு தோன்றியமை பற்றியும் கண்ணகி மதுரையை எரித்தமை எவ்வளவு தூரம் சிலப்பதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் உரையாற்றினார்.