அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்கள்!!

814

Free-Wifi

அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இலவச வைபை வலயங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அதன் திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் பஸ் தரிப்பிடங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தற்போது இலவச வைபை சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அரச திணைக்களங்களில் சேவையை பெற்றுக்கொள்ளும் மக்களும் இந்த இலவச வைபை சேவையின் ஊடாக மேலும் நன்மையடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.