மயூரனின் மரண தண்டனையை நியாயப்படுத்தும் அவுஸ்திரேலிய பொலிசார்!!

742

Mayuran

போதைப்பொருள் கடத்தியதாக கூறி அவுஸ்திரேலியாவை சேர்ந்த இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாறன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இந்தோனேசிய அரசு மரணதண்டனையை நிறைவேற்றியதும், அதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிந்தும் அவுஸ்திரேலிய பொலிசார் மயூரன் , அன்ரூ ஆகியோரின் தகவலை கொடுத்ததே அவர்களின் மரணத்துக்கு காரணம் என பொலிசார் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பொலிஸ் கமிஷனர் கொல்வின் பாலி ஒன்பது குழு பற்றிய முழு தகவல் முன்னரே கிடைத்திருந்தால் நாங்களே அவர்களை கைது செய்து இருப்போம் என கூறினார்.

மேலும் கடத்தல் குழுவில் எத்தனை பேர் இருந்தனர். அவர்கள் யாருடன் தொடர்பு கொண்டனர் என்ற தகவல் எங்களுக்கு தெரியாது. மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் போதைப்பொருள் கடத்தும் அவுஸ்திரேலியர்களுக்கு இதே போன்ற தண்டனை வழங்கப்படுமா என உறுதியளிக்க முடியாது.

இண்டர்போலிடன் இருந்து குற்றவாளிகளின் தகவலை பகிர்ந்தளிக்க வேண்டி இதுவரை 72,000 கோரிக்கைகள் வந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் குற்றவாளிகளின் தகவல்களை பகிர்ந்துகொள்ளச் சொல்லி பல்வேறு நாடுகளில் இருந்து 250 கோரிக்கைகள் வந்துள்ளன. மரண தண்டனையை பின்பற்றும் சீனா போன்ற நாடுகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என மேலும் கொல்வின் கூறினார்.