புதன் கிரகம் 7 கிலோமீற்றர்கள் வரை சுருங்கியுள்ளது!!

320

Mercury

புதன் கிரகம் 7 கிலோமீற்றர்கள் வரை சுருங்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி புதன் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட ‘மெசெஞ்சர்’ விண்கலத்தின் ஊடாக புதன் கிரகம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் விண்வெளிக்கு ஏவப்பட்ட மெசெஞ்சர் விண்கலம் எரிபொருள் தீர்ந்தமை காரணமாக புதன் கிரகத்தில் வீழ்த்தப்பட்டது.இதன் புதனில் 16 மீற்றர் வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி நாசா நிறுவனத்தினால் ஏவப்பட்ட குறித்த விண்கலம் செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட பல கிரகங்களை ஆய்வு செய்து பின்னர் பல லட்சம் மைல்கள் சூரியனைச் சுற்றி பயணம் செய்து பின்னர் புதன் கிரகத்தில் வீழ்த்தப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு புதன் கிரகத்தை 4500 தடவைகள் சுற்றி வந்தது. இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி புதன் கிரகத்தில் பகல் நேர வெப்பநிலை 450 செல்சியஸ் அளவிலும். இரவு நேர வெப்பநிலை 180 செல்சியஸ் அளவிலும் உள்ளமை தெரியவந்துள்ளது. இதுதவிர முன்னரை விட புதன் கிரகம் 7 கிலோமீற்றர்கள் வரை சுருங்கியுள்ளது.

சூரியனின் அதிக வெப்ப கதிர்வீச்சு காரணமாக புதனில் இருந்து பல சடப்பொருள்கள் ஆவியாகியுள்ளன. இன்னும் சில பகுதிகள் வெடித்து சிதறியுள்ளன. வெப்பநிலை இருந்த போதும், சில இடங்களில் பனிக்கட்டிகள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.