பாராளுமன்றத்தில் மைத்திரி மற்றும் மஹிந்த விசேட சந்திப்பு!!(படங்கள்)

621

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுக்கள் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியம் 1.45 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

சுமார் ஒரு மணி நேரமாக இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார்.

ஆனால் இருவரும் செய்தியாளர்களிடம் பேசப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை. இருவருக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள் ஏதுவும் வெளியாகவில்லை.

இச் சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் டலஸ் அழகப்பெரும, குமார வெல்கம ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்ததாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார்.

சுமார் இரண்டு மணி நேரங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றாலும், இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை வெளியிட அதில் பங்கேற்ற அமைச்சர் துமிந்த திசாநாயக்க மறுத்துவிட்டார். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்ஷன யாப்பா விரைவில் ஊடக அறிக்கையொன்று வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது குறித்தே பேசப்பட்டது என இருதரப்பினரும் கூறுகிறார்கள்.

1 2 3 4 5