கிணற்றுக்குள் வீழ்ந்து குழந்தை பலி!!

682

Kinaru

புத்தளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விளையாட்டுப்பொருள் வீழ்ந்ததையடுத்து குறித்த குழந்தை அதனை எடுக்க முயற்சித்தவேளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை காணாது தாய் தேடிய நிலையிலேயே குறித்த குழந்தை பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் உயிரிழந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்