கடந்த வாரத்தில் மாத்திரம் 200 பேருக்கு இரட்டை குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு ஆவண அடிப்படையில் முழு தகுதி உடையவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது கடந்த நான்கு வருடங்களுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 30ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட 9 நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் பலர் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களுக்கு விரைவில் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.






